Government Industrial Training Institute (ITI) Guindy admission 2020: கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 31/10/2020 வரை நேரடி மாணவர் சேர்க்கை.

Government Industrial Training Institute (ITI) Guindy admission 2020
Government Industrial Training Institute (ITI) Guindy admission 2020

 

தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் கிண்டி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

2020-ஆம் ஆண்டிற்கு கிண்டி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், உள்ள பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 17 தொழிற்பிரிவுகளில் 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெட்ரா மாணவர்களுக்கு வாய்ப்பு தரும் விதமாக நேரடி சேர்க்கை 23/10/2020 முதல் 31/10/2020 வரை நடைபெற்று வருகிறது.  இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் தகுதியுள்ள  மாணவர்கள் இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடியாக பயிற்சியில் சேரலாம்.

கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தகுதி பெரும் சேரும் மாணவர்களுக்கு அரசால் கட்டணமில்லா பயிற்சி விலையில்லா மடி கணினி, விலையில்லா மிதிவண்டி, கட்டமில்லா பேருந்து பயணச் சலுகை, விலையில்லா பாடப்புத்தகம், விலையில்லா சீருடை, மாதாந்திர உதவித்தொகை ரூ.500/- மற்றும் விலையில்லா வரைபட கருவிகள் என பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ், பெரிய வேலை அளிக்கும் மற்றும் முன்னோடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.

தொழில் பயிற்சி நிலைய தொலைபேசி எண்கள் – 044-22501350, 044-22501982, 9499055649ம் 9499055651

  1. அதிகாரபூர்வ அறிவிப்பு 
  2. அறிவிப்பு இணையத்தளம்.

The post Government Industrial Training Institute (ITI) Guindy admission 2020 appeared first on GOVERNMENT JOB LIVE.



Category : governmentjoblive